திங்கள், 5 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (09:05 IST)

”சாவார்க்கரை அவமதிப்பவர்களுடன் சமரசம்..” சிவசேனா மீது பாயும் ஃபட்நாவிஸ்

”சாவார்க்கரை அவமதிப்பவர்களுடன் சமரசம்..” சிவசேனா மீது பாயும் ஃபட்நாவிஸ்
வீர சாவார்க்கரை அவமதிப்பவார்களுடன் சிவசேனா சமரசம் செய்து கொண்டது துர்திருஷ்டவசமானது என பாஜகவை சேர்ந்த தேவேந்திர ஃபட்நாவிஸ் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் நடைபெற்ற அரசியல் குழப்பத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த சிவசேனா, அதன் பின்பு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன்  ஆட்சி அமைத்தது.
”சாவார்க்கரை அவமதிப்பவர்களுடன் சமரசம்..” சிவசேனா மீது பாயும் ஃபட்நாவிஸ்

இந்நிலையில் மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் வரவிருக்கும் பஞ்சாயத்து சமதிகள் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஃபட்நாவிஸ் “இந்துத்துவா சிந்தாந்தவாதி வீர சாவார்க்கரை அவமதிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சிவசேனா சமரசம் செய்து கொண்டது துரதிருஷ்டவசமானது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கைக்கோர்த்து இருப்பதை பால் தாக்கரே அறிந்தால், அவர் சொர்க்கத்தில் அழுது கொண்டிருப்பார்” என கூறினார்.