செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 2 ஜனவரி 2020 (10:04 IST)

நித்யானந்தா ஆசிரமத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள்..

அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமம் மாநகராட்சி அதிகாரிகளால் இடித்து தள்ளப்பட்டது.

நித்யானந்தா மீது பாலியல் புகார், குழந்தை கடத்தல் போன்ற வழக்குகள் உள்ள நிலையில் அவர் தீடீரென வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். மேலும் ஈக்குவேடார் நாட்டில் உள்ள ஒரு தீவை தனி நாடாக ஆக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன.

இதனிடையே குஜராத் மாநிலம் அகமாதாபாத்திலுள்ள நித்யானந்தாவின் ஆசிரமம், சட்ட விரோதமாக நில ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அந்த ஆசிரமத்தை இடிக்கவும், அதன் சொத்துகளை பறிமுதல் செய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் நேற்று நித்யானந்தா ஆசிரமம் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தள்ளப்பட்டது.