திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 மார்ச் 2022 (09:07 IST)

மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பு தரிசன அனுமதி! – திருப்பதி தேவஸ்தானம்!

திருப்பதியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் தொடங்குவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். அதில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்க அவர்களுக்கு சிறப்பு வரிசையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் பொருட்டு இந்த சிறப்பு வரிசை ரத்து செய்யப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் பல பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் மீண்டும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன வரிசையை தொடங்குவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்த சிறப்பு தரிசனம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.