1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 மார்ச் 2022 (20:41 IST)

திருப்பதியில் விஐபி தரிசனம் திடீர் ரத்து!

திருப்பதியில் திடீரென விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது \
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த பல ஆண்டுகளாக விஐபி தரிசன முறை நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் திருப்பதி கோவிலில் விஐபி பிரேக் தரிசனத்தில் சிபாரிசு கடிதம் கொண்டு வருபவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது