செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (08:41 IST)

தினசரி சேவைகளுக்கும் டிக்கெட் உயர்வா? திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் கட்டணங்களை திடீரென உயர்த்திய நிலையில் தற்போது தினசரி சேவைகளுக்கும் கட்டண உயர்வு என்பது குறித்த விளக்கத்தை அளித்துள்ளது. 
 
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி நடைபெறும் தினசரி சேவைகளுக்கான கட்டணம் உயர்வு இல்லை என்றும் இது குறித்து பரவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்
 
மேலும் ஏழுமலையான் கோவிலில் உள்ள அன்னதான கூடம் சிசிடிவி கண்காணிப்பு கூட்டங்களையும் அவர் நேற்று ஆய்வு செய்தார்
 
 திருமலைக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புக்காக 3000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.