செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

திருப்பதி-திருமலை தேவஸ்தான பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!

திருப்பதி-திருமலை தேவஸ்தான பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!
திருப்பதியில் இருந்து திருமலைக்கு சென்று கொண்டிருந்த தேவஸ்தான பேருந்து ஒன்று திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
திருப்பதி திருமலையில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகம் இருப்பதை அடுத்து கூடுதலாக பேருந்து விட முடிவு செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு கூடுதல் பேருந்து ஒன்று அனுப்பப்பட்டது. இந்தப் பேருந்து மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்
 
இந்த பேருந்தில் பக்தர்கள் யாரும் இல்லாததால் எந்தவிதமான உயிர்ப்பலியும்  இல்லை என்பது குறிப்பிடத்தக்கது