வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 ஜனவரி 2019 (11:06 IST)

தினகரன் தான் டாப்: கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்; ஆட்டம்காணும் எதிர்கட்சிகள்

திருவாரூர் இடைத்தேர்தலில் தினகரன் தான் டாப் என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28 ஆம் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
 
கஜா புயலினால் திருவாரூர் பாதிக்கப்பட்டுள்ளதாக காரணம் காட்டி அங்கு தேர்தலை ஒத்தி வைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
திருவாரூரில் மக்கள் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய உதவிகளை அரசு செய்துகொடுக்காததால் மக்கள் ஆளும் அதிமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக்கொண்ட தினகரன், அவ்வப்போது மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு உதவிகள் செய்தும், ஆறுதல்களை கூறியும் வருகிறார். இதனால் மக்களுக்கு தினகரம் மீது நம்பிக்கை உண்டாகியிருக்கிறது.
 
இந்நிலையில்  மக்கள் செய்தி மையம் என்ற அமைப்பு திருவாரூர் தொகுதியில் மொத்தம் 1467 பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பில், தினகரனினுக்கு 647 பேரும், திமுகவிற்கு 604 பேரும், அதிமுகவிற்கு 206 பேரும், பாஜக-விற்கு 10 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலை தினகரன் கரெக்டாக பயன்படுத்தினால் அவர் எளிதில் வெற்றி பெறலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இந்த கருத்துக்கணிப்பால் அதிமுக, திமுக தரப்பு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.