1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 அக்டோபர் 2020 (16:29 IST)

குறையும் விமானப் பயண செலவு – மத்திய அரசு அளித்த சலுகை!

குறையும் விமானப் பயண செலவு – மத்திய அரசு அளித்த சலுகை!
இந்தியாவில் விமானப் பயணத்துக்கான கட்டணங்கள் குறையும் என தெரிகிறது.

இந்திய விமானப்படைக்காக ஒதுக்கப்பட்ட வான் வழி பாதையில் 10% வான்வெளி பாதையை பயணிகள் மற்றும் வணிக விமானங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பயண நேரம் குறைப்பு மற்றும் எரிபொருள் சேமிப்பு போன்ற வழிகளில் செலவு குறையும் என்பதால் பயணிகளுக்கான விமானக் கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.