திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (12:17 IST)

அவனவன் கொரோனா பீதில கிடக்கான்.. லிப் கிஸ் கேக்குதோ! – காதல் ஜோடிக்கு அபராதம்!

இத்தாலியில் கொரோனா கட்டுபாடு அமலில் உள்ள நிலையில் பொதுவெளியில் முத்தமிட்டுக் கொண்ட காதல் ஜோடிக்கு ரூ.34 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பல நாடுகளில் கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் கொரோனா வேகமாக பரவிய நாடுகளில் இத்தாலி முக்கியமான ஒன்று. இதனால் இன்னமுமே அங்கு கொரோனா விதிமுறைகள் மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்தாலே மாஸ்க் அணிய வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் மாஸ்க்கை கழட்ட கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுவெளியில் சந்தித்துக் கொண்ட ஒரு காதல் ஜோடி ஆர்வத்தை அடக்க மாட்டாமல் பொதுமக்கள் நடமாடும் இடத்தில் முக கவசத்தை கழட்டியதுடன், முத்தத்தையும் பறிமாறிக் கொண்டுள்ளனர்.

உடனடியாக அவர்களை பிடித்த பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் தங்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகியுள்ளதாக கூறியுள்ளனர். எனினும் அதிகாரிகள் அவர்களுக்கு 360 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.34 ஆயிரம்) அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவம் இத்தாலியில் உள்ள சக காதல் ஜோடிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.