செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (15:39 IST)

பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; சென்னையில் அதிர்ச்சி

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் பாலியல் தொல்லை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிறுவர், சிறுமியர்கள் தாங்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே கூறலாம் என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
 
இதனைக் கேட்டு பள்ளியில் படித்து வந்த 2 சிறுவர்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது 3 வாலிபர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக அழுது கொண்டே தெரிவித்தனர். இதனைக்கேட்டு அதிர்ந்து போன அதிகாரிகள் அந்த சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த சூர்யா(21), பரத் (25), முத்துப்பாண்டி (19) ஆகிய 3 அயோக்கியர்களை போலீஸார் கோக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.