புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (09:26 IST)

குடிபோதையில் மாமியாரை கற்பழித்த மருமகன்

திண்டுக்கல்லில் குடிபோதையில் மருமகன் மாமியாரை கற்பழித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் புங்கம்பாடி பிரிவைச் சேர்ந்வர் வெங்கிடுசாமி. இவரது மனைவி ராமுத்தாய். இவர்களுக்கு சென்ராயன், மாரிமுத்து என்ற மகன்களும் தனலட்சுமி என்ற மகளும் இருந்தனர். தனலட்சுமிக்கு முத்தையா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கலைச்செல்வி என்ற மகள் உள்ளார்.
 
இந்நிலையில் சமீபத்தில் அடுத்தடுத்து ராமுத்தாயின் கணவர் வெங்கிடுசாமி, மகள் தனலட்சுமி, மகன் மாரிமுத்து ஆகியோர் இறந்ததால் ராமுத்தாய் தனது பேத்தி தனலட்சுமியுடன் வசித்து வந்தார்.
 
இதற்கிடையே கலைச்செல்வி வேலைக்கு சென்றபோது, அவர்களது வீட்டிற்கு குடிபோதையில் வந்த முத்தையா, தனது மாமியார் ராமுத்தாயிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். ராமுத்தாய் பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.
 
இதனால் கடுப்பான முத்தையா மாமியார் என்றும் பாராமல் அவரை கற்பழித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளான்.
 
இதையடுத்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ராமுத்தாயின் உடலை மீட்டனர். இந்த கொலை குறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், கொடூரன் முத்தையாவை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.