வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (07:35 IST)

உத்தவ் தாக்கரே மீது மாட்டு சாணம் வீச்சு.. மும்பையில் பரபரப்பு..!

மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மீது மாட்டுச் சாணம் வீசியதால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சில மர்ம நபர்கள் உத்தவ் தாக்கரே கார் மீது மாட்டு சாணத்தை வீசிவிட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதை எடுத்து இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்திற்கு இடமாக இருந்த 20 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை செய்தது ராஜ் தாக்கரேயின் கூலிப்படையினர் என்று உத்தவ் தாக்கரே கட்சியின் தலைவர் ஆனந்த் துபே குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

ஒரு முன்னாள் முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களுக்கு எப்படி இந்த அரசு பாதுகாப்பு கொடுக்கும் என்றும் மகாராஷ்டிராவில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும் எனவே துணை முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ்  தாக்கரே ஆகிய இருவரும் அண்ணன் தம்பி முறை என்ற நிலையில் இருவரும் வெவ்வேறு கூட்டணியில் இருப்பதால் அரசியல் பகை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva