1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. three persons arreste related to tiger sheroff gunshoot

டைகர் ஷெராப் சுடப்பட்ட விவகாரம்!.. ராஜஸ்தானில் 3 பேர் கைது!...

tiger sheroff
பாலிவுட்ட் நடிகர் டைகர் ஷெராப் நேற்று இரவு 7 மணியளவில் மும்பையின் ஜூஹூ பகுதியில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்திற்கு வந்துவிட்டு வீட்டிற்கு காரில் புறப்பட்டபோது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர். அதில், கார் ஓட்டுனர் காயமடைந்தார். ஷெராப்புக்கும் காயம் ஏற்பட்டது.

ஆனாலும், காயமடைந்த ஓட்டுனரை தனக்கு அருகில் அமர வைத்துக்கொண்டு டைகர் ஷெராப் அவரே காரை ஓட்டி சென்றுவிட்டார்.   நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்ததால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஆடியோ வெளியிட்டுள்ளது. பலமுறை எச்சரித்தும் கேட்காததால் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், சல்மான்கானுடன் நடிக்கும் நடிகர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை எனவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய 3 பேரை போலீசார் ராஜஸ்தானில் வைத்து கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் போலீசாருக்கு மும்பை போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் கோட்டா நகரில் அந்த 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் 2 பேர ராஜஸ்தானையும் ஒருவர் பீகாரையும் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மரணத்தை முன் கூட்டியே கணித்த பாதிரியார் - சர்ச்சில் சிலுவை விழுந்து மரணம்!..