செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 14 மே 2020 (08:05 IST)

கொரோனாவை வென்ற 113 வயது பாட்டி! முழுவதும் குணமாகி சாதனை!

ஸ்பெயினில் 113 வயதான மூதாட்டி ஒருவர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமாகியுள்ளது கொரோனா நோயாளிகளிக்கு மனதளவில் தன்னம்பிக்கையை அளித்துள்ளது.

கொரோனா வைரஸால் தற்போது வரை உலகம் முழுவதும் 43 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. 15.5 லட்சம் பேர் குணமாகியுள்ளனர். இந்த வைரஸானது 60 வயதுக்கு மேல் உள்ளவர்களைதான் அதிகமாகப் பாதித்து அவர்களின் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக மரணத்துக்கு அழைத்துச் செல்கிறது என சொல்லப்படுகிறது.

ஆனால் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஓர்லாண்டோ பகுதியில் உள்ள முதியோர் காப்பகத்தில் மரியா பிரன்யாஸ் என்ற 113 வயது மூதாட்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளார். ஒரு மாத காலமாக தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் இரத்த மாதிரிகளில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த செய்தியானது கொரோனாவால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்தவர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.