திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 ஜூன் 2024 (07:53 IST)

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

tirupathi
சனி ஞாயிறு வார விடுமுறை மற்றும் திங்கள் பக்ரீத் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை இருப்பதை அடுத்து திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் கூடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

திருப்பதியில் சாதாரணமாக அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற நிலையில் தற்போது மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திருப்பதியில் அதிகமாக கூட்டம் இருப்பதாகவும் அதனை அடுத்து பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் கடந்த 14ஆம் தேதி மட்டும் 36,000 பேர் முடி காணிக்கை செலுத்தி உள்ளதாகவும் மேலும் முடி காணிக்கை செலுத்துவதற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் திருப்பதியில் அலைமோதும் கூட்டம் காரணமாக கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Edited by Siva