1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2024 (09:23 IST)

இன்று முதல் திருப்பதி செல்லும் முக்கிய ரயில் ரத்து.. பயணிகள் அதிருப்தி..!

Train
திருப்பதி முதல் காட்பாடி வரை இயங்கும் மெமு ரயில் இன்று முதல் ஜூன் 30-ம் தேதி வரை ரத்து என தென்னக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

திருப்பதி - காட்பாடி இடையிலான ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதனை அடுத்து திருப்பதி முதல் காட்பாடி வரை செல்லும் மெமு ரயில் மற்றும் மறு மார்க்கமாக காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் ஆகியவை ஜூன் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த இரண்டு நாட்களில் அதிகாலை 3.50 மணிக்கு திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் செல்லும் ரயில் மற்றும் அதிகாலை 4 மணிக்கு சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில் ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Edited by Siva