1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 13 ஜனவரி 2024 (18:58 IST)

2.13 கோடி பணத்துடன் ஏ.டி.எம் வாகனத்தை திருட முயன்றவர்கள் கைது!

Gujarat
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள  காந்திதாம் நகரில் உள்ள பண மேலாண்மை நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 5 பேர் அப்பகுதியில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புவதற்காக ரூ.2.13 கோடி பணத்துடன் வாகனத்தில் சென்றுள்ளனர்.

செல்லும்போது, வழியில் டீ குடிப்பதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றனர். இதற்கிடையில் ஒரு நபர் சாவியை பயன்படுத்தி, ஏடிஎம் வாகனத்தை கடத்திச் சென்றுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்களில் ஒருவரான தீப் சதாரா, ஒரு பைக்கில் லிப்ட் கேட்டு கடத்திச் செல்லும் வாகனத்தை துரத்திச் சென்றுள்ளார். 

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட  நிலையில், போலீஸாரும் தன்னை துரத்தி வருவதை தெரிந்துகொண்டு கடத்திச் சென்றவர் வாகனத்தை ஊருக்கு வெளியே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

பின்னர், கடத்தப்பட்ட வாகனத்தையும் அதிலுள்ள பணத்தையும் போலீஸார் பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து போலீஸார் விசாரிக்கையில்,கடத்தலில் தொடர்புடைய 6 பேரை கைது செய்துள்ளனர். இதில் மேலாண்மை நிறுவனத்தில்  பணியாற்றி வந்தது தெரிய வந்தது.

இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.