குஜராத்தில் உள்ள டெக் சிட்டியில் மது அருந்த அனுமதி
குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இங்கு காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள டெக் சிட்டியில் உள்ள ஓட்டல், ரெஸ்டாரென்ட், கிளப்புகளில் மதுபானம் அருந்த குஜராத் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த டெக் சிட்டி இந்தியாவின் முதல் கிரீன்பீல்ட் ஸ்மார்ட் சிட்டியாக கருதப்படும் நிலையில், சர்வதேச நிதி சேவை மையமாகவும் கருதப்படுகிறது.
இந்த நிலையில், பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தின் இன்டர் நேசஷல் பைனான்ஸ் டெக் சிட்டியில்( GIFT) மதுபானம் உட்கொள்ள அனுமதி அளித்துள்ளது மாநில அரசு. குஜராத்தில் உலகளாவிய உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு வெளி நாட்டுகளை சேர்ந்த பிரதி நிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இம்மாநாட்டை கருத்தில் கொண்டு டெக் சிட்டியில் மது அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.