வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 18 நவம்பர் 2023 (16:50 IST)

''முகமது ஷமி மிகவும் சவாலானவர்-'' ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பேட்டி

rohit sharma, PatCummins
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், முதல் அரையிறுதியில்  இந்திய அணி , நியூசிலாந்தை வீழ்த்தியது. எனவே வரவுள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமபாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்,  இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்பு நடைபெறவுள்ள சாகச நிகழ்ச்சி ஒத்திகையில் இந்திய விமானப் படை ஈடுபட்டுள்ளது. அதேபோல் இரு அணி கேப்டன்களான ரோஹித் சர்மா மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் உலகக் கோப்பை முன்பு போட்டோ சூட் எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து, கேப்டன் கம்மின்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் இந்திய அணி பந்துவீச்சாளர்களில்  முகமது ஷமி மிகவும் சவாலானவர் என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஷமியால் இந்திய அணி சூப்பர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.