1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (13:34 IST)

திருப்பதியில் சுப்ரபாத சேவை நிறுத்தம்: இனி திருப்பாவை பூஜைகள் தான்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு நாளும் தினசரி அதிகாலையில் சுப்பிரபாதம் சேவை நடைபெறும் நிலையில் இனி சுப்ரபாத சேவை நிறுத்தப்படும் என்றும் அதற்கு பதிலாக திருப்பாவை பூஜைகள் நடைபெறும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இன்று முதல் மார்கழி மாதம் பிறந்ததை அடுத்து இந்த மாற்றம் நடைபெற்று உள்ளதாகவும் மார்கழி மாதம் முழுவதும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பூஜைகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அருளிய திருப்பாவை திருப்பதியில் ஒலிக்க இருப்பதை அடுத்து பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது