புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (16:54 IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 3வது மலைச்சாலை எப்போது?

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல ஏற்கனவே இரண்டு மலைச்சாலைகளில் இருக்கும் நிலையில் மூன்றாவது மலைச்சாலை எப்போது என்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
 
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியபோது கடப்பாவை திருமலையை இணைக்கும் வகையில் காட்டுப்பகுதி வழியாக நடைபாதை இருந்தது. இப்போது அந்த பாதையை சீரமைக்க திட்டமிட்டுள்ளோம். இதனை 3வது பாதையாக விரைவில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மூன்றாவது மலைச்சாலை ஏற்படுத்துவதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் சமீபத்தில் பெய்த மழை காரணமாக இரண்டு மலைகளும் பாதிக்கப்பட்டது. எனவே மலைப்பாதையில் எதிர்காலத்தில் மண்சரிவுகள் ஏற்படாமலிருக்க நிபுணர்களின் ஆலோசனையை பெறவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.