வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 10 டிசம்பர் 2021 (09:01 IST)

பஸ் டிக்கெட் எடுக்கும்போதே தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு!

திருப்பதி செல்லும்போது பேருந்து டிக்கெட் எடுக்கும் போதே ரூபாய் 300 தரிசன டிக்கெட்டை எடுத்துக்கொள்ளும் வசதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட்டுகள் மற்றும் ரூபாய் 300 தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது ஆந்திர அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பேருந்து டிக்கெட்டுடன் ரூபாய் 300 தரிசன டிக்கெட்டையும் வழங்கும் வசதியை திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முதல் கட்டமாக ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, பெங்களூரு, சென்னை, வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து கிளம்பும் ஆந்திர அரசு பேருந்துகளில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது