1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 ஜனவரி 2022 (15:30 IST)

திருப்பதி கோயிலுக்கு விரைவில் 3வது மலைப்பாதை: தேவஸ்தானம் தகவல்

திருப்பதி கோயிலுக்கு விரைவில் மூன்றாவது பாதை அமைக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 
 
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதை ஏற்கனவே இரண்டு உள்ள நிலையில் மூன்றாவது மலை பாதை அமைக்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு உள்ளது என்பதும் இந்த திட்டத்திற்கு வனத்துறையினர்களின் அனுமதிக்காக காத்திருக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் இரண்டு வழிகளிலும் பழுது ஏற்பட்டதை அடுத்து மூன்றாவது மலைப்பாதையின் பணிகள் துரிதமாக பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல மூன்றாவது மலைப்பாதை அமைக்க விரைவில் வனத்துறை அனுமதி பெற்று சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும் என சற்று முன்னர் திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.