செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 29 டிசம்பர் 2021 (18:30 IST)

சென்னையில் கிடைக்கும் திருப்பதி லட்டு: தேவஸ்தானம் நடவடிக்கை

சென்னையிலேயே திருப்பதி லட்டு கிடைக்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
 
ஏழுமலையானை வழிபடுவோர் அனைவரும் பிரசாதமாக திருப்பதி லட்டை வாங்கிக் கொண்டு வருவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையிலேயே திருப்பதி லட்டு கிடைக்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னையில் தினமும் 30 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சென்னை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.