திருப்பதியில் இன்று முதல் இலவச தரிச டிக்கெட்: ஆன்லைனில் பெற்று கொள்ளலாம்!
திருப்பதியில் இன்று முதல் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டோக்கன் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் இலவச தரிசனத்திற்காக டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு இலவசமாக தரிசன் டோக்கன் வழங்கி வரும் நிலையில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசனத்திற்காக டோக்கன் இன்று முதல் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இன்று காலை 9 மணி முதல் தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட்டுகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஜனவரி மாதத்திற்கு 2.60 லட்சம் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.