திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (19:19 IST)

இட ஒதுக்கீடு முடிவுக்கு கொண்டு வர சதி நடக்கிறது- ராகுல்காந்தி எம்.பி.,

ragul gandhi
UGCயின் புதிய வரைவில் உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய  பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு முடிவுக்கு கொண்டு வர சதி நடப்பதாக ராகுல்காந்தி எம்பி., தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில்,  உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி,ஓபிசி ஆகிய பிரிவுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர சதி நடக்கிறது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பேசிய பாஜக ஆர்.எஸ்.எஸ் இப்போது இதுபோன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் வேலையைப் பறிக்க நினைக்கின்றன.

சமூக நீதிக்காக போராடும் மாவீரர்களில் கனவுகளை கொல்லவும், தாழ்த்தப்பட்ட பிரிவினரின் பங்களிப்பை இல்லாது ஒழிப்பதற்கும் இது ஒரு முயற்சியாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதான் அடையாள அரசியலுக்கும் உண்மையான நீதிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் பாஜகவின் குணாதிசயம் என்று தெரிவித்துள்ளார்.