தொடர்புடைய செய்திகள்
- 21 தொகுதிகள் கொண்ட பட்டியல் தயாரானது உண்மையா? தமிழ்நாடு காங்கிரஸ் அறிக்கை..!
- இந்தியா கூட்டணி உடைய ராகுல் காந்தியின் யாத்திரை தான் காரணமா? பரபரப்பு தகவல்..!
- யாத்திரையில் ராகுல் காந்தியே இல்லை.. அவரை போன்ற போலி நபரை பயன்படுத்துகின்றனர்: அசாம் முதலமைச்சர்..!
- நிதிஷ்குமார் அமைச்சரவையில் துணை முதல்வராகும் பாஜக எம்.எல்.ஏ: பீகாரில் கூட்டணி ஆட்சி..!
- திமுக கூட்டணியில் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கு இடமில்லையா? பெரும் பரபரப்பு..
முதல்கட்ட பேச்சுவார்த்தை திருப்தி..அதிமுக, பாஜகவை எதிர்கொள்ள ஆலோசனை..!
முதல்கட்ட பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், அதிமுக, பாஜகவை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினோம் என்றும், திமுகவிடம் தொகுதி பட்டியல் எதையும் காங்கிரஸ் கொடுக்கவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை குறித்து டிஆர் பாலு கூறியபோது, காங்கிரஸ் கட்சி விருப்ப பட்டியல் எதையும் வழங்கவில்லை. லோக்சபா தேர்தல் காங்கிரஸ் கட்சியுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது.
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உதயநிதி கேட்டதில் தவறு இல்லை என்று கூறிய நிலையில் நிதிஷ் குமார் சென்றதால் இந்தியா கூட்டணியில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றார்.
இந்த நிலையில் கூட்டணி மற்றும் இட ஒதுக்கீடு குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்னும் சில நாட்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அந்த பேச்சு வார்த்தையின் போது தான் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்த முடிவு தெரியும்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
