1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (13:51 IST)

ஆன்லைன் தேர்வில் திடீரென ஏற்பட்ட குளறுபடி : மாணவர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைன் தேர்வு நடத்த திட்டமிட்ட நிலையில் டெல்லியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இளங்கலை படிப்பு ஆன்லைன் தேர்வு நடந்தது. ஆனால் இதில் வினாத்தாள்கள் வழங்கப்பட்டதில் குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டெல்லி பல்கலைக் கழகம் சார்பில் கடந்த வெள்ளியன்று இளங்கலை மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடந்தது. இந்த தேர்வை ஒரு லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் எழுதினர். காலை 11:30 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வுக்கு இணையதளத்தில் வினாத்தாள்கள் பதிவேற்றப்பட்டது. அதனை அடுத்து மாணவர்கள் தேர்வு எழுத தொடங்கினர்
 
ஆனால் 12 மணி அளவில் திடீரென மற்றொரு வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டதால் மாணவர்கள் பரபரப்பு அடைந்தனர். ஏராளமான மாணவர்கள் முதலில் கொடுத்த வினாத்தாள்களுக்கு தேர்வை எழுதிக் கொண்டிருந்த நிலையில் இரண்டாவது வந்த வினாத்தாள் தான் உண்மையான வினாத்தாள் என்று அறிவிக்கப்பட்டதால் பலர் குழப்பம் அடைந்தனர். 
 
வினாத்தாள் குளறுபடி தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் புகார் செய்தனர். இது குறித்து விளக்கமளித்த டெல்லி பல்கலைக்கழகம் அனைத்து மாணவர்களுக்கும் வினாத்தாளில் குளறுபடி ஏற்படவில்லை என்றும் ஒரு சில மாணவர்களுக்கு மட்டுமே அந்த குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து இரண்டு வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது