1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (08:01 IST)

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: மாணவர்கள் விறுவிறுப்பு!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளிவந்த நிலையில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மட்டுமே பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் சான்றிதழ் சரிபார்ப்பும் ஆன்லைன் மூலமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இணையவழி விண்ணப்பம் கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கிய நிலையில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதுவரை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்புக்காக விண்ணப்ப உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆகஸ்ட் 16 ஆம் தேதி அதாவது இன்றுடன் விண்ணப்ப பதிவு நிறைவு பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இதுவரை பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் விறுவிறுப்பாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு எண்கள் வரும் 21ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது