செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (17:37 IST)

சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட தேர்வு முடிவுகள்: மாணவர்கள் மகிழ்ச்சி

சென்னை பல்கலைக்கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கான தேர்வு முடிவுகளை சற்றுமுன் வெளியிட்டதை அடுத்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர் 
 
கடந்த ஏப்ரல் மாதம் சென்னை பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை படிப்புக்கான தேர்வுகளை நடத்தியது. இந்த தேர்வுக்கான முடிவுகள் சற்று முன் வெளியாகி உள்ளது
 
இளங்கலை இரண்டாவது மற்றும் நான்காவது செமஸ்டர் தேர்வு முடிவுகளும், முதுகலை மூன்றாவது செமஸ்டர் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் எம்சிஏ மூன்றாவது மற்றும் நான்காவது செமஸ்டர் தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை பல்கலைக்கழகம் நடத்திய இளங்கலை மற்றும் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது