வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (11:42 IST)

ஈகோ பார்க்க வேண்டாம்: இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு குறித்து முக ஸ்டாலின் அறிக்கை

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதால் என்பதும் பத்தாம் வகுப்பு உள்பட அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன என்பதும் தெரிந்ததே 
 
அதேபோல் கல்லூரிகளில் உள்ள அனைத்து செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் மட்டும் கடைசி செமஸ்டர் தேர்வை எழுத வேண்டும் என யுஜிசி கண்டிப்பாக கூறியுள்ளது. இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகம் உள்பட ஒரு சில மாநிலங்கள் முடிவு எடுத்த போதிலும் அதற்கு யுஜிசி ஒப்புதல் அளிக்கவில்லை
 
இந்த நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 
 
கலை, அறிவியல் மற்றும் பொறியியல் இறுதியாண்டுத் தேர்வை ரத்து செய்வதில் மத்திய, மாநில அரசுகள் காட்டும் அலட்சியத்தாலும், ஈகோவினாலும், சான்றிதழ் பெற்று உயர்கல்வி மற்றும் வேலைகளில் சேர இயலாமல், மாணவர்கள் தாங்க முடியாத இன்னலுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.
 
பல்கலைக்கழக மானியக்குழுவோ “தேர்வுகளை ரத்து செய்ய மாநிலங்களுக்கு உரிமை இல்லை” என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசு இதில் “தங்களுக்கே அதிகாரம்” என்று விதண்டாவாதம் செய்யாமல் அந்தந்த மாநிலங்களில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாநில அரசுகளே முடிவு செய்து இறுதியாண்டுத் தேர்வினை ரத்து செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தி மாணவர்களின் மனக்குமுறலை பெற்றோருக்கு இருக்கும் பேரழுத்தத்தைப் போக்கிட முன்வர வேண்டும்! என்று கூறியுள்ளார்.