வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (19:31 IST)

இறந்த தந்தையை மீட்க குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற பெண்!!

இறந்த தன் தந்தையை மீட்க வேண்டி ஒரு பெண் 2 மாதக் குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி யூனியனின் தென்கிழக்குப் பகுதியான கைலாஹின் வசித்து வரும் ஒரு பெண்ணின் தந்தை சமீபத்தில் உயிரிழந்துவிட்டார்.

தந்தை மீது கொண்ட பாசத்தால், அவரை மீண்டும் உயிருடன் மீட்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையில், ஒரு குழந்தையைப் பலி கொடுத்தால் தந்தை உயிர்த்தெழுவார் என்று ஒருவர் கூறியதை நம்பி, அப்பெண்,  பிறந்து 2 மாதமே ஆன குழந்தை ஒன்றைக் கடத்தியுள்ளார்,

அப்பெண் தன் திட்டத்தை நிறைவேற்றும் முன்னரெ போலீசார், குழந்தையை மீட்டனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில்,அப்பெண் தன்  நரபலிக்கு முயன்றதை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj