1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. The student who strangled the child

குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்ற மாணவி

abuse
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி பச்சிளம் குழந்தையின் கழுத்தை  நெறித்துக் கொன்றுள்ளார்.

கேரள மா நிலம் திருச்சூர் மாவட்டம் மலக்கப்பாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஒரு கல்லூரி மாணவி( 23 வயது).  இவர் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாகியுள்ளார்.

இதையடுத்து அவருக்கு வீட்டில் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்குப் பிறகு அவருக்கு ரத்தப் போக்கு அதிகமாகவே அவர் சுகாதாரப் பணியாளர் ஒருவரின் உதவியை  நாடியுள்ளார்.

ஆனால்,திருமணம் ஆகாமல் இவருக்கு எப்படி திருமணம் ஆனது என்ற சந்தேகத்தில் போலீஸில் புகாரளித்தார்.

இதன்பின் போலீஸார் மாணவியிடம் விசாரித்தனர், அதற்கு அவர் குழந்தை வீட்டில் பிறந்து இறந்துவிட்டதாக தெரிவித்து, குழந்தையின் உடல் எங்கே எனக் கூற மறுத்துவிட்டார்.  இதையடுத்து வீட்டை சுற்றிலும் போலிஸார் தேடியபோது கால்வாயில் குழந்தையின் உடலை எடுத்தனர்.

குழந்தையை மாணவி கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்து,  மாணவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குழந்தையின் பிரேதப் பரிசோதனையில் குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
குலோப்ஜாம் விலையை குறைக்க கூறி கடை உரிமையாளரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவன்!