திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2024 (10:51 IST)

கேரள அமைச்சர் குவைத் செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பா? பரபரப்பு தகவல்..!

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதில் பெரும்பாலும் கேரளாவை சேர்ந்தவர்கள் தான் பலியாகி உள்ளனர் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குவைத் செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் படுகாயம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து கேரளா அரசின் சார்பில் குவைத்திற்கு கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்களை அனுப்ப திட்டமிடப்பட்டது.
 
இந்த நிலையில் கேரளா செல்வதற்காக விமானத்திற்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் காத்திருந்த நிலையில் தான் குவைத் செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இக்கட்டான சூழலில் கூட மத்திய அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.
 
ஏற்கனவே மத்திய அமைச்சர் குவைத் சென்று மீட்பு நடவடிக்கைகளை கவனித்து வரும் நிலையில் கேரள அமைச்சர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அரசு கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
Edited by Mahendran