வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2024 (12:51 IST)

நீட் தேர்வில் தவறு நடந்தால் ஒப்புக்கொள்ளுங்கள்.! மத்திய அரசுக்கும், NTA-வுக்கும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..!!

Neet SC
நீட் முறைகேடு புகார் தொடர்பாக 2 வாரங்களில் விளக்கம் அளிக்குமாறு தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
நடந்து முடிந்த மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் இருந்தது. இது தொடர்பாக தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.  நீட் தேர்வில் தவறு நடந்தால் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
 
மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் 0.001 சதவீதம் யாராவது அலட்சியமாக இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும் என்றும் ஒரு தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறி இருக்கக்கூடிய சூழலை யோசித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

 
நீட் முறைகேடு வழக்கில் மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
National Testing A