திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2024 (17:03 IST)

ரூ.30 க்கு லிப்ஸ்டிக் வங்கி வந்த கணவர்- விவாகரத்து கோரிய மனைவி!

lipstick
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ரூ.30 க்கு லிப்ஸ்டிக் வாங்கி  வந்த கணவர் மீது கோபம் கொண்ட மனைவி விவாகரத்து கோரியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
 
உத்தரபிரதேசம் மா நிலத்தைச் சேர்ந்த ஒரு  கணவரிடம் அவரது மனைவி  ரூ.10 மதிப்புள்ள லிப்ஸ்டிக் வாங்கி வரும்படி கூறியுள்ளார்.
 
அதன்பின்னர், கடைக்குச் சென்ற அவர்  பல கடைகளில் தேடியும் ரூ.10 மதிப்புள்ள லிப்ஸ்டிக் கிடைக்கவில்லை. எனவே ரூ.10 லிப்ஸ்டிக்கு பதிலாக ரூ.30 மதிப்புள்ள லிப்ஸ்டிக்கை வாங்கி வந்து தன் மனைவியிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார்.
 
இதனால் கோபம் கொண்ட அவரது மனைவி சற்று விலையுயர்வாக ரூ.30 க்கு லிப்ஸ்டிக் வாங்கி வந்ததாகக் கூறி கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.
 
மேலும், கணவருக்கு சேமிக்கும் பழக்கம் இல்லை எனக் கூறி கணவரிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது.