வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2024 (15:57 IST)

''மஞ்சும்மல் பாய்ஸ்'' திரைப்படம் ரூ.100 கோடி வசூல்!

manjummel boys
மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி   ரிலீஸான இப்படத்தை சிதம்பர்ம எஸ் கொடுவால் இயக்கியுள்ளார்.  சவுபின் ஷாயிர், ஸ்ரீ நாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  சுஷின் ஸ்யாம் இசையமைத்துள்ளார்.
 
ஏற்கனவே இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், தனுஷ், கார்த்திக் சுப்புராஜ், வெங்கட்பிரபு  உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
 
இப்படம் மொழி கடந்து அனைவரும் வரவேற்றுள்ளனர். சனி, ஞாயிற்றுக்கிழமையில் இப்படம் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் மட்டும் 850 காட்சிகள் ஓடியுள்ளதாக கூறப்படுகிறது.
 
மொழியைக் கடந்து இப்படத்தை அனைவரும் கொண்டாடி வருவதால் இப்படம் வசூல் குவித்து வருகிறது. இப்படக்குழுவினரின் திறமையை  பலரும் பாராட்டி வருகின்றனர்.
 
இந்த  நிலையில்,  மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  மேலும், இதனை சாத்தியமாக்கிய ரசிகர்கள் குறிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு  நன்றி என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
 
இப்படம் வசூலில் மேலும் சாதனை படைக்கும் என கூறப்படும்   நிலையில்,  மஞ்சும்மல் பட இயக்குனரின் அடுத்த படத்தை தமிழ் சினிமா தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாவது குறிப்பிடத்தக்கது.