ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2024 (16:43 IST)

3 முறை வெற்றி பெற்ற சசிதரூர் தோல்வி அடைவாரா? கருத்துக்கணிப்பில் அதிர்ச்சி தகவல்..!

கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் தொகுதியில் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சசிதரூர்  இந்த முறை தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக ராஜீவ் சந்திரசேகர் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக இந்தியா டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது

தென்னிந்தியாவில் இன்னும் ஒரே ஒரு தொகுதியில் கூட பாஜக வெல்லவில்லை என்றால் அது கேரளா தான் என்பதும் தமிழ்நாட்டில் கூட பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 இந்த நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கேரளாவில் மூன்று இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக இந்தியா டிவி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் கேரளா பாஜகவினர் உற்சாகமடைந்துள்ளனர்

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கூட தேறாது என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியும் கேரளாவில் மூன்று தொகுதியும் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளிவந்திருப்பது பாஜக தென்னிந்தியாவிலும் காலூன்ற தொடங்கிவிட்டது என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran