1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 30 டிசம்பர் 2019 (20:53 IST)

11 பேர் தற்கொலை செய்த வீட்டில்... குடியேறிய மருத்துவர்...

டெல்லியில் 11 பேர் தற்கொலை செய்து கொண்ட பேய் வீடு என்று அழைக்கப்பட்ட ஒரு வீட்டில் ஒரு  மருத்துவர் குடியேறியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு, புராரி என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
 
இதில், 10 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.
 
அந்த வீட்டில் மக்கள் குடிபோகாமல் அது பேய் வீடு என்று அழைத்தனர். இந்நிலையில், டாக்டர் மோகன் என்பவர் அந்த வீடு தனக்குப் பிடித்துள்ளதாகவும், மூடநம்பிக்கைகளை தான் நம்புவதில்லை எனவும் கூறி அந்த வீட்டுக்குள் தைரியமாகக் குடிபுகுந்துள்ளார்.