மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், இவர்களுக்கு விஷம் வைத்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அதன் பின்னர், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், 17 பேரின் மரணத்திற்கு பின்னணியில் விஷம் காரணமாக இருக்கலாம் என்றும், அதை தவிர தொற்றுநோய் வைரஸ் காய்ச்சல் ஆகியவை எதுவும் காரணம் அல்ல என்றும், விஷம் தான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது எந்த விஷம் என்பது குறித்து ஆய்வுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதன் முழு விவரம் தெரிந்த பின்னர் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது செயற்கையாக வெளியில் இருந்து உடலுக்குள் சென்ற விஷமாக இருக்கலாம் என்றும், அல்லது இயற்கையாகவே உடலுக்குள் விஷம் உருவாகி இருக்கலாம் என்றும், சோதனைக்கு பின்னரே உண்மை தெரியவரும் என்றும் கூறியுள்ளனர்.
Edited by Siva