செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 28 டிசம்பர் 2019 (08:18 IST)

டெல்லியில் வரலாறு காணாத பனிப்பொழிவு – மக்கள் அவதி!

தலைநகர் டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை தற்போது ஓரளவு குறைந்துள்ள சூழலில் பனிப்பொழிவும், குளிரும் மக்களை வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் நவம்பர் மாதம் முதல் தொடங்கும் பனிக்காலம் பிப்ரவரி வரை 4 மாதங்கள் நீடிக்கிறது. ஆனால் இந்த ஆண்டு கடந்த 22 ஆண்டுகாலமாக இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் மிகவும் குறைந்த பட்ச வெட்பநிலையாக 4.2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. அதீத பனி பொழிவால் சூரிய உதயத்தை கூட மக்கள் அறிந்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. பனிமூட்டம் காரணமாக சாலைகளில் 100 மீட்டர் அருகே உள்ள பொருட்கள் கூட கண்ணுக்கு தெரியாத நிலை இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.