தீவிரவாதிகள் அச்சுறுத்தல்... இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்துக்கு பாதுகாப்பு

isro
Last Updated: வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (18:13 IST)
இந்தியாவில் கடல் மார்கமாக, தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பு, அனைத்து மாநிலங்களுக்கும்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் உள்ள கடல் பகுதியை ஒட்டிய பகுதியில் கடலோர ரோந்து காவல் படையினர் மற்றும், போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். எனவே,  ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், உள்ள நம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ ரக்கெட் ஏவுதளத்திற்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஸ்ரீகரிகோட்டா செல்லும் வழி மற்றும், அங்குள்ள  கடற்கரை கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளிலும் பலத்த பாதுக்காப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தில் தீவிர ஊடுருவி இருப்பதாக போலீஸாருக்கு தகவல்கள் வந்ததை அடுத்து,மாநிலத்தில் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 இதில் மேலும் படிக்கவும் :