1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 26 நவம்பர் 2023 (13:56 IST)

கமகமக்கும் கொண்டைக் கடலை குழம்பு செய்வது எப்படி?

Kondaikadalai kulambu
உணவு வகைகளில் பல ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்தது கொண்டைக் கடலை. இதை கொண்டு சுவையான காரச்சாரமான கொண்டைக் கடலை குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம்.


 
  • தேவையானவை: கொண்டைக்கடலை, பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை,
  • தேங்காய் துறுவல், சீரகம், பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, மிளகு இவற்றை சேர்த்து மசாலாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே நன்றாக ஊற வைத்து சமைப்பதற்கு முன் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • பின்னர் அரைத்த இஞ்சி,பூண்டு பேஸ்ட் சேர்த்து தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
  • பின்னர் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து மிளகாய்த்தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்க வேண்டும்.
  • பின்னர் அரைத்த மசாலா, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • நல்ல கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் கமகமக்கும் கொண்டைக்கடலை குழம்பு தயார்.