1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Telungana DGP suspend cancelled

டிஜிபி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து.. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி..!

டிஜிபி
தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில்  சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது  டிஜிபி அஞ்சனி குமார் என்பவர்  இன்றைய முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக டிஜிபி அஞ்சனி குமாரை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்தது. இந்த நிலையில் தற்போது ரேவந்த் ரெட்டி முதலமைச்சர் ஆகி உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் பூங்கொத்து கொடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஜிபி அஞ்சலி குமாரின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. எனவே அவர் மீண்டும் தனது பிஜேபி மனையை தொடர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஆள் வைத்து தாக்க சதி நடக்கிறது: முதலமைச்சர் மீது கவர்னர் திடுக்கிடும் குற்றச்சாட்டு..!