வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2023 (11:55 IST)

குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் கொடுத்த விவகாரம்: பிணவறை உதவியாளர் சஸ்பெண்ட்

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
 இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அரசு மருத்துவமனையின் அவலத்தை வெளிக்காட்டியது 
 
இந்த நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்து பிறந்த குழந்தையின் உடலை சரியாக மூடாமல் அட்டைப்பெட்டியில் பெற்றோரிடம் வழங்கிய பிணவறை உதவியாளர் பன்னீர்செல்வம் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மறு உத்தரவு வரும் வரை சஸ்பெண்ட் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva