புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 29 பிப்ரவரி 2020 (11:26 IST)

கொரொனா பயமா.. எங்களுக்கா? கோழிக்கறியை வெளுத்துக்கட்டிய அமைச்சர்கள்!!

கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றால் கொரோனா வைரஸ் பரவாது என தெலங்கானா அமைச்சர்கள் அச்சத்தை போக்கியுள்ளனர். 
 
கடந்த சில மாதங்களாக சீனாவை மட்டும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் பலவற்றையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 2800ஐ தாண்டிவிட்ட நிலையில், தொடர்ந்து தென்கொரியா, ஈரான் போன்ற நாடுகளிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில், கோழிக்கறி, முட்டை ஆகியவற்றை உண்பதால் கொரோனா தாக்கும் என செய்தி வெளியான நிலையில், பொதுமக்களின் அச்சத்தை போக்க, தெலங்கானா அமைச்சர்கள் பொது இடத்தில் கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை உண்டு அச்சத்தை போக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.