1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 29 பிப்ரவரி 2020 (09:10 IST)

கொரோனா வைரஸ் எதிரொலி: பள்ளிகள், பூங்காக்கள் மூடல்!

ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாவதை தொடர்ந்து அங்குள்ள பள்ளிகளை மூட பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாக சீனாவை மட்டும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் பலவற்றையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 2800ஐ தாண்டிவிட்ட நிலையில், தொடர்ந்து தென்கொரியா, ஈரான் போன்ற நாடுகளிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது.

கொரோனாவால் தாக்குதலுக்கு உள்ளான நாடுகளில் ஜப்பானும் இணைந்துள்ளது. இதனால் ஜூலை மாதத்தில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாக இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று அபாயம் இருப்பதால் பள்ளிகளை மூட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜப்பானில் உள்ள டிஸ்னிலேண்ட் முதற்கொண்ட கேளிக்கை பூங்காக்களும் 2 வார காலத்திற்கு மூட உத்தேசித்துள்ளன. மேலும் பல உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவையும் மூட இருப்பதால் ஜப்பானில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.