திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (09:31 IST)

ஸ்டாலின் அண்ணாவுடன் இணைந்து சர்வாதிகார அரசை விரட்டுவோம்: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி

Tejaswi Yadav
ஸ்டாலின் அண்ணாவுடன் இணைந்து சர்வாதிகார அரசை விரட்டுவோம் என சமீபத்தில் பீகார் மாநில துணை முதலமைச்சராக பதவியேற்ற தேஜஸ்வி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தேஜஸ்வியின் கட்சியுடன் இணைந்து நிதிஷ்குமார் தற்போது புதிய ஆட்சியை அமைத்து உள்ளார் என்பதும் நிதிஷ்குமார் முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர் என்று தெரிந்ததே
 
இந்த நிலையில் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ்குமாருக்கும், துண்ஐ முதல் அமைச்சராக பதவியேற்ற தேஜஸ்விக்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார் 
 
அந்த வாழ்த்துக்கு நன்றி கூறிய தேஜஸ்வி, மிகவும் நன்றி ஸ்டாலின் அண்ணா, நாம் அனைவரும் கூட்டாக இந்த சர்வாதிகார அரசை வீழ்த்துவோம் என்று பதிலளித்துள்ளார். இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது