திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 10 ஆகஸ்ட் 2022 (17:56 IST)

நிதிஷ்குமார் ஒப்புக்கு சப்பாணி, தேஜஸ்வி தான் நிஜ முதல்வர்: பாஜக விமர்சனம்!

bjp
பீகார் முதல்வராக மீண்டும் பதவி ஏற்றுள்ள நிதிஷ்குமாருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறி வரும் நிலையில் பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. 
 
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் துணை முதல்வராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்வும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். பாஜக கூட்டணியில் இருந்து விலக நிதீஷ் குமார் முடிவு எடுத்த முடிவு எடுத்தது பீகார் மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் பீகார் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவி ஏற்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக, நிதிஷ்குமார் ஒப்புக்கு சப்பாணியாக முதல்வராக தான் இருப்பார் என்றும் அங்கு துணை முதல்வராக பதவி ஏற்றிருக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி தான் ஒரிஜினல் முதல்வராக இருப்பார் என்றும் விமர்சனம் செய்துள்ளது.