1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Teacher told students to massage him

மாணவர்களை மசாஜ் செய்ய சொன்ன ஆசிரியர்!

சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூரில் உள்ள அரசு பள்ளியில், ஆசிரியர் ஒருவர் 10 ஆம் வகுப்பு மாணவர்களை அழைத்து அவருக்கு மசாஜ் செய்ய கூறியுள்ளார்.


 


இதை அடுத்து, அந்த ஆசிரியர் தரையில் படுக்க, 3 மாணவர்கள் அவரின் கழுத்து, முதுகு மற்றும் கால் ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்துவிட்டுள்ளனர். இதை ஒரு மாணவர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் விட்டுள்ளார்.

இந்த விஷயம் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு போக, அவர்கள், அந்த ஆசிரியரை தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளனர். இது குறித்து அந்த ஆசிரியர் கூறியதாவது, “நான் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதை பார்த்து மாணவர்கள் தான் தாமாக முன்வந்து எனக்கு மசாஜ் செய்துவிட்டனர்.” என்றார்.
அடுத்த கட்டுரையில்
பத்திரிக்கையாளரின் உயிரை காப்பாற்றிய மோடி